அண்மைய மின் கட்டண திருத்தம் தொடர்பில் ஜனக ரத்நாயக்க முக்கிய தகவல்
அண்மையில் மேற்கொள்ளப்பட்ட மின் கட்டண குறைப்பில் தற்போதைய அரசாங்கமோ அல்லது அரசியல் அதிகாரிகளோ எவ்வித பங்களிப்பும் செலுத்தவில்லை என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் ஜனக ரத்நாயக்க குற்றஞ்சாட்டி உள்ளார்.
குறித்த நடவடிக்கைக்கு சிவில் அமைப்புகளும் பொதுமக்களுமே காரணமென செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையில் குறிப்பி்ட்டுள்ளார்.
மின் கட்டண திருத்தம்
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், "சமீபத்தில் அறிவிக்கப்பட்ட 21.9 சதவீத மின்சாரக்கட்டண திருத்தத்தை பாராட்டுக்குரியது.

இந்த கட்டண திருத்தத்தை வழங்க பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களோ அல்லது அரசியல் அதிகாரங்களோ உடன்படவில்லை.
இதற்கிடையில், பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தற்போதைய தலைவர், இலங்கை மின்சாரசபை கடந்தாண்டு 62 பில்லியன் ரூபாய்களை பெற்றுள்ளது.
நீர்க்கட்டணத்தை குறைக்க நடவடிக்கை
இந்தாண்டு ஜனவரியில் மாத்திரம் 10 பில்லியன் ரூபாய்களையும்,பெப்ரவரியில் 15 பில்லியன் ரூபாய்களை இலாபமாக பெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அதன் நன்மை பொதுமக்களுக்கு செல்லவேண்டும் என அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்தநிலையில், அதிகாரிகள் நீர்க்கட்டணத்தையும் குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்." எனவும் வலியுறுத்தியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
விண்வெளியில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்கும் தமிழர் - விண்ணுக்கு புறப்பட்ட PSLV C62 News Lankasri
பற்றியெரியும் ஈரான்... போர்க்களமான தெருக்கள்: இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ள வர்த்தகப் பாதிப்பு News Lankasri