நாட்டை விட்டு தப்பி ஓட கோட்டாபயவுக்கு கிடைத்த வாய்ப்பு ரணிலுக்கு கிடையாது : மரிக்கார்

Gotabaya Rajapaksa Ranil Wickremesinghe Sri Lanka Economic Crisis IMF Sri Lanka Saidulla Marikkar
By Benat Oct 03, 2023 05:49 AM GMT
Report

நாட்டின் நிலைமை தொடர்பில் ஆழமாக சிந்தித்து செயற்படாவிட்டால்  நாட்டை விட்டு தப்பிச் செல்ல கோட்டாபயவுக்கு கிடைத்த வாய்ப்பு கூட ரணில் விக்ரமசிங்கவுக்கு கிடைக்காது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார்.  

நேற்றையதினம்   கொழும்பில் இடம்பெற்ற  செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

வெளிநாட்டில் இருந்து வந்த கணவனின் வெறிச்செயல்: கொடூரமாக கொல்லப்பட்ட இளம் மனைவி

வெளிநாட்டில் இருந்து வந்த கணவனின் வெறிச்செயல்: கொடூரமாக கொல்லப்பட்ட இளம் மனைவி

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

ஆசியாவிலேயே மின் கட்டணம் உயர்வாகக் காணப்படும் நாடுகளில் இலங்கை மூன்றாவது இடத்தில் உள்ளது. 30 பில்லியன் ரூபா எதிர்பார்த்த வருமானம் கிடைக்காததன் காரணமாக மீண்டும் மின் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் அமைச்சரவையில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

அவ்வாறு மீண்டும் மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டால் தென் ஆசியாவிலேயே உயர் மின் கட்டணத்தை கொண்ட நாடாக இலங்கை விளங்கும்.

 ரணில் விக்ரமசிங்க வீட்டுக்கு அனுப்பப்பட்டிருப்பார்

நாட்டின் நிலைமை தொடர்பில் அடுத்த 100 நாட்களுக்கு ஆழமாக சிந்தித்து செயற்படாவிட்டால் கோட்டாபய ராஜபக்சவுக்கு நாட்டிலிருந்து தப்பிச் செல்ல கிடைத்த வாய்ப்பு கூட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு கிடைக்காது.

நாட்டை விட்டு தப்பி ஓட கோட்டாபயவுக்கு கிடைத்த வாய்ப்பு ரணிலுக்கு கிடையாது : மரிக்கார் | Electricity Bill Increase Sri Lanka

பொருட்களின் விலை அதிகரிப்புடன், அடக்குமுறைகளும் அதிகரித்து வருகின்றன. அடக்குமுறைகளால் ஜனநாயகம் படிப்படியாக அழிக்கப்படும் இந்த நாட்டுக்கு சர்வதேச நாணய நிதியம் மாத்திரமல்ல, எந்தவொரு சர்வதேச அமைப்பும் உதவ முன்வராது.

இவற்றை மூடி மறைத்து ஊடகப்பிரிவின் ஊடாக எவ்வாறான பிரசாரங்களை முன்னெடுத்து வந்தாலும், அடுத்த ஆண்டு இந்தக் காலப்பகுதியில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வீட்டுக்கு அனுப்பப்பட்டிருப்பார்.

சர்வதேச விசாரணையை முன்னெடுப்பதில் எந்த பிரச்சினையும் இல்லை! கடும் கோபமடைந்த ரணில் (Video)

சர்வதேச விசாரணையை முன்னெடுப்பதில் எந்த பிரச்சினையும் இல்லை! கடும் கோபமடைந்த ரணில் (Video)

கியூபா, அமெரிக்கா மற்றும் ஜேர்மன் போன்ற நாடுகளுக்கு ஜனாதிபதி விஜயம் செய்துள்ளதால் என்ன நன்மை கிடைத்துள்ளது? கடன் பெறுவதற்கும், வரி அறவிடுவதற்கும், நாட்டின் சொத்துக்களை விற்பதற்கும் மாத்திரமே அரசாங்கத்துக்கு தெரியும். மக்களின் பொருமைக்கும் ஒரு எல்லை இருக்கிறது. அதனை சோதிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கின்றோம்.

தேர்தலில் தோல்வியடைந்தவர்கள் ஜனாதிபதி அலுவலகத்தை முற்றுகையிட்டு பேரம் பேசிக் கொண்டிருக்கின்றனர். உத்தேசத் தேர்தலில் நிச்சயம் ஆட்சி மாற்றம் ஏற்படும். ஆட்சி மாற்றத்தின் பின்னர் இவை அனைத்துக்கும் இந்த அரசாங்கம் நஷ்டஈடு செலுத்த வேண்டியேற்படும்.

அடுத்த வருடம் தேர்தலுக்குரிய வருடமாகும். ஜனாதிபதித் தேர்தலை ஒருபோதும் காலம் தாழ்த்த முடியாது. அதற்கு முன்னர் நாடாளுமன்றத் தேர்தல் இடம்பெறும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும். அடுத்த ஆண்டுக்கான வரவு - செலவு திட்டத்தில் சில அமைச்சுக்களுக்கான ஒதுக்கீட்டு சட்ட மூலங்கள் தோல்வியடையக் கூடிய வாய்ப்புக்களும் உள்ளன என  குறிப்பிட்டுள்ளார்.


நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bergen, Norway

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US