அதானிக்கு ஏகபோக உரிமையை வழங்கவே மின்சார சட்டமூலம் : எழுந்துள்ள குற்றச்சாட்டு
இலங்கை மின்சாரச் சட்டமூலத்தின் ஊடாக மின்சாரத் துறையில் தனியார் துறையின் ஏகபோக உரிமையை உருவாக்கி, நாட்டின் மின்சாரத் துறையை இந்தியாவின் அதானி குழுமத்திற்கு விற்க அரசாங்கம் முயற்சிப்பதாக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத்(Vijitha Herath) குற்றம் சுமத்தியுள்ளார்.
மின்சார யோசனை மீதான விவாதத்தின் போது பேசிய அவர், மின்சாரத் துறையில் தனியார் துறை ஏகபோகத்தை உருவாக்குவதே யோசனையின் உள்நோக்கம் என்று குறிப்பிட்டுள்ளார்.
கோரப்படாத முன்மொழிவுகள்
மின்சாரத் துறையில் அரசின் ஏகபோக உரிமையை விமர்சித்த அவர், தற்போது தனியார் துறையின் ஏகபோகத்தை உருவாக்க அரசு முயற்சித்து வருகிறது என்றும் கூறியுள்ளார்.
அதானியின் முன்மொழிவுகளை அமைச்சரவையின் மூலம் கோரப்படாத முன்மொழிவுகளாக அங்கீகரிக்கவும், மின்சார யோசனையை நிறைவேற்றுவதன் மூலம் முன்மொழிவுகளுக்கான சட்ட கட்டமைப்பைப் பெறவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டின் மின்சாரத் துறையின் ஏகபோக உரிமையை தனியாரிடம் ஒப்படைப்பது பாரதூரமான விடயம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |