தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயாராகும் மின்சார சபை ஊழியர்கள்
எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு முன்னர் இலங்கை மின்சார சபை ஊழியர்களின் கோரிக்கைக்கு தீர்வு கிடைக்கவில்லை என்றால், மறு அறிவித்தல் இன்றி தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட போவதாக இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
இலங்கை மின்சார சபையின் 16 தொழிற்சங்கங்கள் இணைந்து நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை கூறியுள்ளன.
தேசிய மின் விநியோக கட்டமைப்பை தொடர்ந்தும் நடத்தி செல்வது மற்றும் ஊழியர்களை பாதுகாத்துக்கொள்வதற்காக தாம் இந்த கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தொழிற்சங்கங்கள் குறிப்பிட்டுள்ளன.
மின்சார சபையின் ஊழியர்களுக்கு தடுப்பூசியை வழங்குவது, மருத்துவ உதவி நடைமுறை, ஊக்குவிப்பு கொடுப்பனவு மற்றும் கோவிட் தொற்றால் உயிரிழக்கும் ஊழியர்களை நம்பி வாழும் நபர்களுக்கு இழப்பீடுகளை வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை தொழிற்சங்கங்கள் அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளன.