மின்சாரம் தாக்கி உயிரிழந்த குடும்பஸ்தர் - மரண விசாரணையில் வெளியான தகவல்
மின்சாரம் தாக்கி உயிரிழந்த குடும்பஸ்தரின் சடலம் மரண விசாரணையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்கம்பிட்டி வீதியில் செவ்வாய்க்கிழமை (21) மின்சாரம் தாக்கிய நபர், உடனடியாக சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்ற நிலையில் மதியம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருந்தார்.
மின்சாரம் தாக்கி பலர் பாதிப்பு
சம்மாந்துறையை சேர்ந்த 42 வயதுடைய குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்திருந்தார்.

சம்மாந்துறை நீதிமன்ற நீதிவான் நூர்டீன் முஹம்மட் சர்ஜுன் கட்டளையின் பிரகாரம் பிரதேச மரண விசாரணை அதிகாரி அப்துல் ஹமீட் அல் - ஜவாஹிர் சம்பவ இடத்திற்கு சென்று மரண விசாரணை மேற்கொண்ட பின்னர் மின்சாரம் தாக்கிய அதிர்ச்சியில் மரணம் சம்பவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து உயிரிழந்த குடும்பஸ்தரின் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் சம்மாந்துறை பிரதேசத்தில் மின்சார தாக்குதலுக்கு இலக்காகி பலர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

