இலங்கையில் அறிமுகமாகும் மின்சார மோட்டார் சைக்கிள்கள்
மின்சார மோட்டார் சைக்கிள்களை ஊக்குவிக்கும் வேலைத்திட்டத்தை மோட்டார் போக்குவரத்து திணைக்களம் ஆரம்பித்துள்ளது.
எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, இலங்கைக்கு இறக்குமதி செய்து விற்பனை செய்யும் மின்சார மோட்டார் சைக்கிள்களை மாற்றியமைத்து விற்பனை செய்யும் நிறுவனங்களின் பிரதிநிதிகள் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் காரியாலயத்திற்கு அழைத்து வரப்பட்டு அந்தந்த மோட்டார் சைக்கிள்களின் தரம் சரிபார்க்கப்பட்டது.
இலங்கையில் இறக்குமதி செய்யப்பட்டு, ஒருங்கிணைப்பு செய்து, மாற்றப்படும் அனைத்து மின்சார மோட்டார் சைக்கிள்களுக்கும் குறிப்பிட்ட தரநிலையை அறிமுகப்படுத்த மோட்டார் போக்குவரத்து திணைக்களம் செயல்பட்டு வருகிறது.
![தையிட்டி விகாரை : என்ன செய்யலாம்](https://cdn.ibcstack.com/article/eafa3708-ce84-4e22-b6a6-518c2b23980b/25-67a890674e00d-md.webp)