யுத்தகாலத்தில் கூட தேர்தல் நடந்தப்பட்டது: திஸ்ஸ அத்தநாயக்க - செய்திகளின் தொகுப்பு (video)
அரசாங்கத்தின் நோக்கத்தினை செயற்படுத்துவதற்காகவே தேர்தலின் போது பாதுகாப்பினை வழங்க முடியாது எனும் பொலிஸ்மா அதிபரின் கருத்திற்கு, யுத்த காலத்திலும் கூட நாட்டில் தேர்தல்கள் இடம்பெற்றன என்பதை பொலிஸ்மா அதிபர் நினைவில் கொள்ள வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
இதற்கமைய நாடளாவிய ரீதியில் 339 வேட்புமனுக்கள் தாக்கல் செய்திருக்கின்றோம்.
வடக்கில் தாக்கல் செய்யப்பட்ட சில வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. அதற்கமைய 336 தொகுதிகளில் நாம் போட்டியிடுகின்றோம்.
உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்திக்கே அதிக கேள்வி காணப்படுகிறது. காரணம் எம்மால் மாத்திரமே மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பிலான முழுமையான செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றய நாளுக்கான மதியநேர செய்திகளின் தொகுப்பு,