தேர்தல்கள் ஆணைக்குழு அரசாங்கத்துக்கு அடிபணிந்துவிட்டது! ஐக்கிய மக்கள் சக்தி குற்றச்சாட்டு
தேர்தல்கள் ஆணைக்குழு தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கத்துக்கு அடிபணிந்துவிட்டதாக ஐக்கிய மக்கள் சக்தி குற்றம் சாட்டியுள்ளது.
கொழும்பில் இன்று (17) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போது ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
தேர்தல் விதி
அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
தமது கட்சியின் நிர்வாகத்தின் கீழ் வராத, வேறு கட்சிகளால் வெற்றி கொள்ளப்படும் உள்ளூராட்சி மன்றங்களுக்கு அபிவிருத்தி நிதி ஒதுக்கப்பட மாட்டாது என்று ஜனாதிபதி அநுர குமார பகிரங்கமாக அச்சுறுத்துகின்றார்.
ஏனைய கட்சி வேட்பாளர்களை திருடர்கள் என்று குற்றம் சாட்டுகின்றார். இவையெல்லாம் தேர்தல் விதிகளை மீறும் செயற்பாடுகள். இது தொடர்பில் தேர்தல் கண்காணிப்பு அமைப்பொன்று தேர்தல்கள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி
ஆனால் குறித்த முறைப்பாட்டுக்கு 15 நாட்கள் கடந்தநிலையிலும் தேர்தல்கள் ஆணைக்குழு இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
அந்தளவுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு ஆளுங்கட்சிக்கு அடிமையாகிப் போயுள்ளது. இதற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி விரைவில் முறைப்பாடு செய்யும் என்றும் அவர் தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.

சிறகடிக்க ஆசை சீரியல் பாட்டி யார் தெரியுமா.. ஒரு காலத்தில் யாருடன் நடித்திருக்கிறார் பாருங்க Cineulagam
