நாடளாவிய ரீதியில் நிறைவுக்கு வந்துள்ள தேர்தல் ஏற்பாட்டு நடவடிக்கைகள்

Election Commission of Sri Lanka Government Of Sri Lanka Sri Lanka Parliament Election 2024
By Independent Writer Nov 12, 2024 09:55 PM GMT
Report

நாளையதினம் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான ஏற்பாட்டு நடவடிக்கைகள் அனைத்தும் நிறைவுக்கு வந்துள்ளன. 

மட்டக்களப்பு 

அந்தவகையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தலுக்கு வாக்களிக்க தேவையான சகல நடவடிக்கையும் முடிவுற்றுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அதிகாரியுமன ஜே.ஜே. முரளீதரன் தெரிவித்துள்ளார். 

நாடளாவிய ரீதியில் நிறைவுக்கு வந்துள்ள தேர்தல் ஏற்பாட்டு நடவடிக்கைகள் | Election Work Been Done In All Over Sri Lanka

மட்டக்களப்பு மாவட்டத்தில் 4 இலட்சத்து 49 ஆயிரத்து 689 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

இந்த தேர்தல் கடமைக்கு 6 ஆயிரத்து 750 பேர் ஈடுபடவுள்ளதுடன் 442 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன் வாக்கெண்ணும் நிலையமாக மட்டக்களப்பு இந்து கல்லூரியில் இடம்பெறும்.

இதில் தபால்மூல வாக்குகளை எண்ணுவதற்காக 9 நிலையங்களும் ஏனைய வாக்குகளை எண்ணுவதற்காக 37 நிலையங்கள் உட்பட 46 நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

செய்தி - பவன், ருசாத்

வன்னி - முல்லைத்தீவு

மேலும், நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான வன்னி தேர்தல் மாவட்டத்தின் முல்லைத்தீவு தொகுதியில் உள்ள வாக்கெடுப்பு நிலயங்களுக்காக வாக்குப்பெட்டிகள் நாளை (13) காலை 7.30 மணி முதல் அனுப்பி வைப்பதற்காக ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

நாடளாவிய ரீதியில் நிறைவுக்கு வந்துள்ள தேர்தல் ஏற்பாட்டு நடவடிக்கைகள் | Election Work Been Done In All Over Sri Lanka

வன்னி தேர்தல் மாவட்டத்தில் முல்லைத்தீவு தொகுதியில் 137 வாக்கெடுப்பு நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதுடன் இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்கத் தகுதியுள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை 86889 ஆகும்.

செய்தி - சண்முகம் தவசீலன் 

நுவரெலியா 

2024ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்காக நுவரெலியா மாவட்டத்தில் அனைத்து நடவடிக்கைகளும் தயாராக உள்ளதாக மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலரும் நுவரெலியா மாவட்ட அரச அதிபருமான நந்தன கலபட தெரிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் நிறைவுக்கு வந்துள்ள தேர்தல் ஏற்பாட்டு நடவடிக்கைகள் | Election Work Been Done In All Over Sri Lanka

நுவரெலியா மாவட்டத்திற்கான 08 நாடாளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்ய 17 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் 11 சுயேட்சை குழுக்களை பிரதிநிதித்துவப்படுத்தி 308 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 

செய்தி - திவா  
GalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US