தேர்தலை ஒத்தி வைக்கும் உத்தேசம் கிடையாது : நீதி அமைச்சர்
தேர்தலை ஒத்தி வைக்கும் உத்தேசம் கிடையாது என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவில் நேற்று (25.03.2024) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்,
நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டுள்ள தேர்தல் திருத்தச் சட்டம் காரணமாக தேர்தல் ஒத்தி வைக்கப்பட மாட்டாது.

தேர்தல் முறைமை திருத்தம்
1994ம் ஆண்டு முதல் ஜனாதிபதி தேர்தல்களின் போது ஊழல் மோசடிகளை தடுப்பதாகவும் தேர்தல் முறைமையை திருத்துவதாக உறுதி அளிக்கப்பட்ட போதிலும் இதுவரையில் எவரும் அதனை நடைமுறைப்படுத்தியதில்லை.
ஊழல் மோசடிகளை ஒழிக்கவும் தேர்தல் முறையில் மாற்றம் கொண்டு வரும் நோக்கிலும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க யோசனைகளை முன்மொழிந்துள்ளார்.
எதிர்வரும் நாட்களில் இரண்டு தேர்தல்கள் நடத்தப்பட உள்ளதாகவும் வேட்பாளர்கள் தேர்தல் குறித்த தங்களது நிலைப்பாடுகளை வெளிப்படுத்த முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
இந்தியாவில் கிரிப்டோகரன்சி வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம் News Lankasri
ரஞ்சி தொடரில் கருண் நாயர் 174 ரன் விளாசல்! அர்ஜுன் டெண்டுல்கர் 100 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் News Lankasri