இலங்கையில் தேர்தலை விரைந்து நடத்தப்பட வேண்டும்: இந்தியாவிடம் சந்திரிகா வலியுறுத்து
இலங்கையில் தற்போது சீரற்ற ஆட்சி தொடர்வதாகவும், மக்கள் ஆணையுடைய சீரான ஆட்சி இடம் பெற வேண்டுமெனில் தேர்தல் ஒன்று விரைந்து நடத்தப்பட வேண்டும் எனவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க வலியுறுத்தியுள்ளார்.
இலங்கைக்கான இந்தியாவின் புதிய தூதுவர் சந்தோஷ் ஜாவை நேற்று (01.02.2024) சந்தித்துக் கலந்துரையாடிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவின் உதவிகள்
மேலும் தெரிவிக்கையில், "இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை நான் பல தடவைகள் சந்தித்துள்ளேன். அவ்வேளைகளில் இலங்கை தொடர்பில் இந்தியாவின் கரிசனைகளுக்கு நன்றி தெரிவித்துள்ளேன்.
இந்நிலையில் இலங்கையின் முன்னேற்றத்துக்கு இந்தியாவின் உதவிகள் தொடர்ந்தும் கிடைக்க வேண்டும் என்பதோடு இந்தியாவுக்கு இலங்கை எப்போதும் நன்றிக் கடனாக இருக்கும்.
அத்தோடு, இலங்கையின் உயிர் நண்பனாக இந்தியாவும், இந்தியாவின் உயிர் நண்பனாக இலங்கையும் இருக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

இலங்கையின் சுதந்திர தினத்தை கரிநாளாகப் பிரகடனப்படுத்தும் போராட்டத்துக்கு வலுச்சேர்ப்போம்: சிறீதரன் அழைப்பு
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

வீட்டை சுத்தம் செய்யும் போது கிடைத்த தந்தையின் பழைய பாஸ்புக்.., ஒரே இரவில் மகன் கோடீஸ்வரன் News Lankasri

அப்ப புரியல, இப்ப புரியுது! 3 ஆண்டுகளுக்கு முன் வசியின் DJ பார்ட்டியில் பிரியங்கா தேஷ்பாண்டே Manithan

ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம், பளார் விட்ட நபர், இவர்களுக்கும் உண்மை தெரிந்ததா? சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam
