தேர்தல் முடிவுகள் கருத்துக் கணிப்புகளுக்கு நேர்மாறாக அமையும்: சோனியா காந்தி உறுதி
மக்களவை தேர்தல் முடிவுகள் கருத்துக் கணிப்புகளுக்கு முற்றிலும் நேர்மாறாக இருக்கும் எனவும் பொறுத்திருந்து பாருங்கள் என்றும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி(Sonia Gandhi) தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின்(M. Karunanidhi)101 ஆவது ஜனன தின நிகழ்வு டெல்லியில் உள்ள திமுக அலுவலகத்தில் இன்று(03.06.2024) இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வின் பின்னர் தேர்தல் முடிவுகள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே சோனியா காந்தி மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள்
அவர் மேலும் கூறுகையில், "நாங்கள் பொறுமை காக்கிறோம். பொறுத்திருந்து பாருங்கள்.
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளுக்கு முற்றிலும் நேர்மாறாக தேர்தல் முடிவுகள் இருக்கும் என நாங்கள் நம்புகிறோம். தேர்தல் முடிவுகள் இந்தியா கூட்டணிக்கு சாதகமாக அமையும்.
கருணாநிதியின் 100 ஆவது ஆண்டு நிறைவு நாளில் திமுகவைச் சேர்ந்த எனது சகாக்களுடன் நிகழ்வில் பங்குபெற்றுவது மகிழ்ச்சி.
பல சந்தர்ப்பங்களில் அவரைச் சந்தித்ததுடன் அவரின் ஞான வார்த்தைகளாலும், அறிவுரைகளாலும் பயனடையும் அதிர்ஷ்டம் எனக்குக் கிடைத்தது.
அவரை சந்தித்ததை அதிர்ஷ்டமாக உணர்கிறேன். இந்த ஜனன தினத்தில் உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
ஏழு கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகின்றன.
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று கணித்துள்ள நிலையில், இந்தியா கூட்டணி இதனை எதிர்த்துள்ளது.
மேலும் தங்கள் கூட்டணி 295 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று இந்தியா கூட்டணி தலைவர்கள் கூறி வருகின்றனர்.
குறித்த கருத்துக்கணிப்பு, பிரதமர் நரேந்திர மோடியின் கற்பனைக் கருத்துக் கணிப்பாகும்.
அத்துடன் 543 உறுப்பினர்களைக் கொண்ட மக்களவையில் 272 என்ற பெரும்பான்மையை தாண்டி 295 இடங்களுக்கு மேல் இண்டியா கூட்டணி பெறும். என அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 நாட்கள் முன்

வெளிநாட்டவர் வேலைவாய்ப்பிற்கு சிக்கல் - பிரித்தானியாவில் 2000 நிறுவனங்களின் விசா ஸ்பான்சர் உரிமங்கள் ரத்து News Lankasri

ரயிலில் இனிப்பு விற்கும் முதியவருக்கு ரூ.1 லட்சம் கொடுக்க வேண்டும்.., விவரம் தெரிந்தால் சொல்லுங்கள் என லாரன்ஸ் வேண்டுகோள் News Lankasri

15 வயதுக்கு கீழ் உள்ள பிள்ளைகள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை: பிரான்ஸ் ஆணையம் பரிந்துரை News Lankasri

இரண்டு உசுரு எடுத்தாச்சு.. மகிழ்ச்சியில் குணசேகரன் டீம்! ஆனால் தர்ஷன் கொடுத்த ஷாக்.. நாளைய ப்ரோமோ Cineulagam
