தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் காற்றில்..! அநுர அரசைக் கடுமையாகச் சாடிய எதிரணி

Anura Kumara Dissanayaka Government Of Sri Lanka NPP Government
By Rakesh Jul 01, 2026 04:28 AM GMT
Report

தற்போதைய அரசின் முறையற்ற பொருளாதார முகாமைத்துவம் மற்றும் வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றாமை காரணமாக நாட்டின் விவசாயிகள், சிறு மற்றும் நடுத்தரத் தொழிலதிபர்கள் மற்றும் பொதுமக்கள் பாரிய அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

எதுல்கோட்டேயிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி தலைமை அலுவலகத்தில் நேற்று(30.06.2026) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வழங்கிய நினைவுப் பரிசு! நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வழங்கிய நினைவுப் பரிசு! நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு

நாட்டில் அரிசிப் பற்றாக்குறை

மேலும் தெரிவிக்கையில், "தேர்தல் காலத்தில் ஒரு கிலோ நெல்லுக்கு 140 ரூபா குறைந்தபட்ச விலை வழங்குவதாக தேசிய மக்கள் சக்தி உறுதியளித்த போதிலும், இன்று ஒரு கிலோ நெல்லை 100 ரூபாவுக்குக் கூட கொள்வனவு செய்ய அரசு முன்வரவில்லை.

இதனால் ரஜரட்ட உள்ளிட்ட பல பகுதிகளில் நெல் விவசாயிகள் வீதியில் இறங்கி போராடத் தொடங்கியுள்ளனர்.

தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் காற்றில்..! அநுர அரசைக் கடுமையாகச் சாடிய எதிரணி | Election Promises Are Up In Air Criticized Govt

நெல் சந்தைப்படுத்தல் சபை மூலம் நெல் கொள்வனவு செய்யப்படும் என அரசு கூறினாலும், கடந்த சில போகங்களாக அரசின் தலையீடு மிகக் குறைவாகவே உள்ளது.

இதன் காரணமாக, தனியார் வர்த்தகர்கள் மிகக் குறைந்த விலைக்கு நெல்லைக் கொள்வனவு செய்ய அரசே வழிவகுத்துள்ளது. எனவே, தேர்தல் வாக்குறுதியின்படி விவசாயிகளின் நெல்லை நியாயமான விலைக்கு கொள்வனவு செய்ய வேண்டும் என்றும், தேவையான உரம் மற்றும் இரசாயனப் பொருள்களை முறையாக வழங்க வேண்டும் என்றும் அரசை வலியுறுத்துகின்றோம்.

நாட்டின் விவசாயிகளிடம் இருந்து நெல்லைக் கொள்வனவு செய்யாத அரசு, வெளிநாடுகளில் இருந்து அரிசி இறக்குமதியை 40 சதவீதத்தால் அதிகரித்துள்ளது.

அரிசி இறக்குமதியை செய்ய மாட்டோம் என விவசாய மற்றும் வர்த்தக அமைச்சர்கள் கூறினாலும், நடைமுறையில் பெருமளவில் அரிசி இறக்குமதி செய்யப்படுகின்றது.

நாட்டில் அரிசிப் பற்றாக்குறை இருந்தால் இறக்குமதி செய்வதில் தவறில்லை. ஆனால் அரசின் நெருங்கிய ஆதரவாளர்களை பணக்காரர்களாக்குவதற்காகவே இந்த இறக்குமதி அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும், இவ்வாறு வெளிநாட்டு அரிசி உபரியாக உள்ளதால் அதனை அரச ஊழியர்களுக்கு தவணை முறையில் 20 கிலோ வீதம் வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.

உலக சந்தை நிலவரப்படி

நாட்டின் வருமானத்துக்கும் வேலைவாய்ப்புக்கும் முக்கிய பங்களிப்பு வழங்கும் சிறு மற்றும் நடுத்தர தொழிலதிபர்கள் மீண்டெழுவதற்கு அரச மற்றும் தனியார் வங்கிகள் அவகாசம் வழங்க வேண்டும். அதை விடுத்து வங்கிகள் இந்தச் சட்டத்தை மீண்டும் கடுமையாகப் பயன்படுத்தினால் ஆயிரக்கணக்கான வணிகங்கள் அழிந்து நாட்டின் பொருளாதாரத்துக்குப் பாரிய பாதிப்பு ஏற்படும்.

தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் காற்றில்..! அநுர அரசைக் கடுமையாகச் சாடிய எதிரணி | Election Promises Are Up In Air Criticized Govt

எனவே, அரசு இதில் உடனடியாகத் தலையிட்டு தொழிலதிபர்களைப் பாதுகாக்க வேண்டும். நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தைக் கடந்துள்ளதுடன், இதுவரை 30 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். டெங்குவை ஒழிப்பதில் அரசு, மாகாண சபைகள் மற்றும் சுகாதாரப் பிரிவினரின் செயற்பாடுகள் எவ்விதத்திலும் திருப்திகரமாக இல்லை.

அரச மருத்துவமனைகள் டெங்கு நோயாளர்களால் நிரம்பி வழிவதோடு சுகாதாரக் கட்டமைப்பு இதனைத் தாங்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

கடந்த அரசுகளின் தவறான கொள்கைகளே இதற்குக் காரணம் என தற்போதைய அமைச்சர்கள் தட்டிக்கழிக்கக் கூடாது. கடந்த அரசுகள் தவறிழைத்திருந்தால், தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசு அதனைச் சரியாகச் செய்து காட்ட வேண்டும்.

வெற்றுப் பெருமைகளைப் பேசுவதை நிறுத்திவிட்டு உள்ளூராட்சி அமைப்புகளைக் கொண்டு டெங்குவை ஒழிப்பதற்கு அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசு எரிபொருள் விலையை 20 ரூபாவால் குறைத்துள்ள போதிலும், கடந்த காலங்களில் பெருமளவில் விலையை உயர்த்தியிருந்தது. தற்போது உலக சந்தையில் கச்சா எண்ணெய் ஒரு பேரல் 70 முதல் 80 டொலருக்கும் குறைவாக வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், அந்தப் பலனை மக்களுக்கு முழுமையாக வழங்க வேண்டும்.

விலைச்சூத்திரம் தேவையில்லை என்றும், துறைமுகத்துக்குக் கொண்டு வரப்படும் விலைக்கே எரிபொருள் வழங்கப்படும் என்றும் அரசு முன்பு கூறியிருந்தது.

தற்போதைய உலக சந்தை நிலவரப்படி, எரிபொருளை பழைய குறைந்த விலைக்கே மக்களுக்கு வழங்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றும் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தொடரும் சோகம் - நான்கு மாணவர்கள் சடலங்களாக மீட்பு - மரணத்திற்கான காரணம்

இலங்கையில் தொடரும் சோகம் - நான்கு மாணவர்கள் சடலங்களாக மீட்பு - மரணத்திற்கான காரணம்

இணைய வழி சூதாட்டத்தினால் பறிபோன இளைஞனின் உயிர்

இணைய வழி சூதாட்டத்தினால் பறிபோன இளைஞனின் உயிர்

மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US