காரைநகர் பிரதேச சபைக்கான புதிய தவிசாளர் தெரிவு நாளை
யாழ்.காரைநகர் பிரதேச சபைக்கு புதிய தவிசாளரைத் தெரிவுசெய்வதற்கான கூட்டம் நாளை புதன்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.
காரைநகர் பிரதேச சபை சபா மண்டபத்தில் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் மாியதாஸ் பற்றிக் நிறஞ்சன் தலைமையில் இடம்பெறும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை (ரெலோ கட்சியை ) பிரதிநிதித்துவப்படுத்தி 2018ஆம் ஆண்டு முதல் தவிசாளராக இருந்த விஜயதா்மா கேதீஷ்வரதாஸ் கடந்த மாதம் 21ஆம் திகதி கோவிட் தொற்று நோய் காரணமாக யாழ். போதனா வைத்தியசாலையில் மரணமானார்.
இதையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கே புதிய தவிசாளரைத் தேர்வு செய்வதற்கான நாளைய
கூட்டத்தில் சுயேச்சை (மீன் சின்னம்) கட்சி சார்பாக 3 உறுப்பினர்களும்,
ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி.) சார்பாக 2 உறுப்பினர்களும், ஐக்கிய
தேசியக் கட்சி சார்பாக 2 உறுப்பினர்களும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி
(சைக்கிள் சின்னம்) சார்பாக ஓர் உறுப்பினரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
உறுப்பினர் சார்பாக 3 உறுப்பினர்களுமாக மொத்தம் 11 போ் இடையே தவிசாளரைத்
தெரிவு செய்வதற்கான முக்கிய கூட்டம் இடம்பெறவுள்ளது.



