அநுர தரப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் நடைமுறைக்கு சாத்தியமற்றது: சாடும் எதிரணிகள்
தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனம் புத்தக அறிவின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளதாகவும், ஆட்சி பற்றிய நடைமுறை தெளிவின்றி காணப்படுவதாகவும் மாத்தளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன தெரிவித்துள்ளார்.
கொலன்னாவையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
ஒட்டுமொத்த நாட்டைப் பற்றிய புரிதல்
ஒட்டுமொத்த நாட்டைப் பற்றிய புரிதலும், ஆட்சியைப் பற்றிய புரிதலும் இல்லாதவர்களின் கருத்துக்கிணங்க இந்த விஞ்ஞாபனம் உருவாக்கப்பட்டது.
இவற்றைச் செய்தால் நாடு மீண்டும் திவாலாவதைத் தடுக்க முடியாது.
இந்த இரண்டு திட்டங்களுக்கு மட்டும் குறைந்தபட்சம் புதிதாக 3 பில்லியன் தேவைப்படுகிறது. இந்தப் பணம் எங்கிருந்து வருகிறது? கேட்கும்போதெல்லாம் வாக்களியுங்கள் என்கிறார்கள். செய்து காட்டுவோம் என்கின்றார்கள்.
கோட்டாபய ராஜபக்ச
2019 இல் ஒரு மாணவன் கோட்டாபய ராஜபக்சவிடம் பொருளாதாரம் குறித்த கேள்விகளை கேட்டபோது, 'என்னிடம் மட்டுமல்ல, மற்றவர்களிடமும் கேள்வி கேளுங்கள்' என்றார். ஆட்சி செய்ய தகுதியானவர்கள் இல்லை என்றால், நாடு முற்றிலும் சிதைந்துவிடும்.
கோட்டாபாயவால் என்ன நடந்தது என்பதை நினைவில் கொள்க" என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |