அமெரிக்காவில் தேர்தலில் போட்டியிடும் பெண் :பரப்பப்படும் இனவெறி பிரச்சாரம்
அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணத்தில் உள்ள கேரி டவுன் கவுன்சில் (நகரசபை) தேர்தலில் போட்டியிடும் இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் சரிகா பன்சால் மீது இனவெறி பிரச்சாரம் பரப்பப்பட்டுள்ளது.
இந்த தேர்தல் எதிர்வரும் அக்டோபர் 10 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
இதில் இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண்ணான சரிகா பன்சால் போட்டியிடுகிறார். இதற்காக அவர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
கறுப்பின நபரின் புகைப்படம்
இந்த நிலையில் தேர்தல் பிரசாரத்தில் சரிகா பன்சால் மீது இனவெறி வெறுப்பு பிரச்சாரம் பரப்பப்பட்டுள்ளது. சரிகா பன்சாலின் பிரச்சார பதாகையில் அவரது முகத்தில் ஒரு கறுப்பின நபரின் முகத்தின் புகைப்படத்தை வைத்துள்ளனர்.
இந்த சம்பவம் அவர் போட்டியிடும் வெஸ்ட் கேரி தொகுதியில் உள்ள ஹைகி ராப்ட் கிராமத்தில் நடந்துள்ளது. அங்கு சரிகா பன்சாலின் பிரச்சார அடையாளங்கள் சிதைக்கப்பட்டு இந்த இனவெறி பிரசாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இது தொடர்பாக சரிகா பன்சால் கூறும்போது, இனவெறி பிரசார சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது.
எனது பிரசாரத்துக்கு எதிராக இனவெறிச் செயலால் உண்மையிலேயே வருத்தம் அடைந்தேன்.
நமது நகரத்தில் ஒற்றுமையை கட்டியெழுப்புவதற்கான வழிமுறையாக நாம் பன்முகத்தன்மையை ஏற்றுக்கொள்ள வேண்டும். கேரி நகரில் பழுப்பு அல்லது கறுப்பு நிற மக்களுக்கு எதிரான மத வெறி அல்லது இன வெறிக்கு இடமில்லை என குறிப்பிட்டுள்ளார்.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 6 நாட்கள் முன்

விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் கழன்று விழுந்த சக்கரம்: பரபரப்பை உருவாக்கிய சம்பவம் News Lankasri

சன் டிவி சீரியல்களை ஓரங்கட்டி டாப் 5 TRPயில் முன்னேறிய விஜய் டிவி சீரியல்... அதிரடி மாற்றம் Cineulagam
