தேர்தல் செலவுகள் ஒழுங்குமுறை சட்டம் தொடர்பில் அரசியல் கட்சிகளுக்குத் தெரிவிக்க தீர்மானம்
தேர்தல் செலவுகள் ஒழுங்குமுறை சட்டம் தொடர்பில் அரசியல் கட்சிகளுக்கு அறிவிக்க தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
இது தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கை எதிர்வரும் 27ஆம் திகதி மற்றும் மார்ச் 06 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளதாக தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
நிறைவேற்றப்பட்ட சட்டம்
தேர்தல் செலவுகள் ஒழுங்குமுறை சட்டத்தின்படி, தேர்தலுக்கு செலவிடப்படும் பணம் மட்டுப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனினும், இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னர் இதுவரை ஒரு தேர்தலும் நடத்தப்படவில்லை.

அதன் காரணமாக இந்தச் சட்டத்தின் ஏற்பாடுகள் தொடர்பில் அரசியல்வாதிகளுக்கு உரிய புரிதலை ஏற்படுத்தும் நோக்கில் இந்தக் கூட்டம் நடத்தப்படவுள்ளது என்றும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய கிழக்கை சூழ்ந்துள்ள போர் மேகம் இந்தியாவையும் ஆக்கிரமிக்கும் அபாயம் - நாடு முழுவதும் பறந்த உத்தரவு
தீவிரமடையும் நிலைமை: டுபாய் - அபுதாபியில் சிக்கியுள்ள வெளிநாட்டவர்களுக்கு விசேட சலுகை - வெளியானது அறிவிப்பு