நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட வசந்த கரன்னாகொடவுக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு
புதிய இணைப்பு
கைது செய்யப்பட்ட முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொடவுக்கு பிணை வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஊழல் குற்றச்சாட்டுக்களின் கீழ் கைது செய்யப்பட்ட வசந்த கரன்னாகொடவுக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இவ்வாறு பிணையில் செல்ல அனுமதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் இணைப்பு
இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் இன்று காலை (3) கைது செய்யப்பட்ட முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட சற்று முன்னர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டுள்ளார்.
முதலாம் இணைப்பு
முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அழைப்பாணை..
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இரண்டாவது மகனான யோஷித ராஜபக்சவை இலங்கை கடற்படையில் நிர்வாக அதிகாரியாக இணைத்தது மற்றும் அரச நிதியை தவறாகப் பயன்படுத்தி யோஷித ராஜபக்சவை பிரித்தானியாவிற்கு பயிற்சிக்காக அனுப்பிய குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில் வசந்த கரன்னாகொட கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் ஜூன் மாதம் 16 மற்றும் 22ஆம் திகதிகளில் வசந்த கரன்னாகொடவுக்கு இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்தது.
எனினும், அவர் அந்த திகதிகளில் ஆணைக்குழுவில் முன்னிலையாகவில்லை. இந்தநிலையில், இன்றையதினம் அவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
you may like this video