புதிய அரசாங்கத்தின் சட்டவிரோத செயல்: தடுத்து நிறுத்திய ஆணைக்குழு
புதிய அரசாங்கத்தால் இலங்கை துறைமுக அதிகார சபைக்கு புதிய முகாமைத்துவ பணிப்பாளர் ஒருவர் நியமிக்கப்படவிருந்த நிலையில் இதனை தேர்தல்கள் ஆணைக்குழு இடைநிறுத்தியுள்ளது.
தற்போதைய முகாமைத்துவப் பணிப்பாளர் பிரபாத் மாளவிகேயை விலக்கி, புதியவரை நியமிக்க, துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சு முயற்சித்துள்ளது.
எனினும், இந்த விவகாரம் தேர்தல் ஆணையத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டதையடுத்து, ஆணைக்குழு, அமைச்சக செயலாளருக்கு கடிதம் மூலம், இது தொடர்பாக விளக்கம் கோரியுள்ளதுடன், புதிய நியமனத்தை நிறுத்தி வைக்க உத்தரவிட்டுள்ளது.
பதவிக்காலம் முடிவடையவில்லை
தற்போதைய முகாமைத்துவப் பணிப்பாளரை, மீண்டும் பணியில் அமர்த்துவது மட்டுமின்றி, நாடாளுமன்றத் தேர்தல் முடியும் வரையில் இதுபோன்ற மாற்றங்களைச் செய்ய வேண்டாம் என்றும் அமைச்சக செயலாளருக்கு, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தற்போதைய முகாமைத்துவப் பணிப்பாளர் பிரபாத் மாளவிகேயின் பதவிக்காலம் முடிவடைய ஏறக்குறைய பத்து வருடங்கள் எஞ்சியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |