பொதுத்தேர்தல் வேட்பாளர்களுக்கு தேர்தல் ஆணையகத்தின் எச்சரிக்கை
கடந்த பொதுத்தேர்தலில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் தங்களது வருமானம் மற்றும் செலவு அறிக்கையை டிசம்பர் 6ஆம் திகதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையகம் அறிவித்துள்ளது.
ஆணைக்குழுவின் கூற்றுப்படி, கட்சிகளின் வேட்பாளர்கள், தேசிய பட்டியல் வேட்பாளர்கள், கட்சிகளின் செயலாளர்கள் மற்றும் சுயேச்சை குழுக்களின் தலைவர்களுக்கு பொருந்தும் என்று ஆணையகம் தெரிவித்துள்ளது.
காலக்கெடு
இந்தநிலையில் காலக்கெடுவான டிசம்பர் 06 நள்ளிரவு 12 மணிக்கு முன்னர், தேர்தல் செலவினங்களை ஒழுங்குபடுத்தும் சட்டத்தை மீறுவோர் சட்டரீதியான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் தேர்தல் ஆணையகம் எச்சரித்துள்ளது.
இந்தநிலையில், வேட்பாளர்கள் போட்டியிட்ட ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனித்தனியாக அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று ஆணையகம் கோரியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |