நிரந்தர நியமனம் கோரும் யாழ். சுகாதார தொண்டர்கள்
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் சுகாதார தொண்டர்கள் நிரந்தர நியமனம் கோருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த ஊழியர்கள் 2000ஆம் ஆண்டிலிருந்து 2019ஆம் ஆண்டு வரை கடமையாற்றியும் அவர்களுக்கு எவ்விதமான நியமனங்களும் வழங்கப்படவில்லை என அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இது தொடர்பாக அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,
“ஜனாதிபதி செயலகத்தில் இது தொடர்பாக முறைப்பாடு செய்த போது, யாழ். போதனா வைத்தியசாலையில் இருந்து கடிதமொன்றை எடுத்து வருமாறு கூறியிருந்தனர்.
நாம் கடிதத்தை பெற்று வந்த போதிலும், இப்போது எந்த வித தீர்மானமும் எடுக்க முடியாது என கூறுகின்றனர்.
இது தொடர்பில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு எங்களுக்கொரு தீர்வு பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் கூறுகையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

Brain Teaser Challenge: மனதை குழப்பும் புதிர்- 7 வினாடியில் திருடனின் மனைவியை கண்டுபிடிக்க முடியுமா? Manithan

வெளிநாட்டு மாணவர்களுக்கு உணவு கிடையாது: உணவு வங்கிகளின் முடிவால் தவிக்கும் சர்வதேச மாணவர்கள் News Lankasri
