நிதி அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ள தேர்தல்கள் ஆணைக்குழு
நாட்டில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பணிகளுக்காக செலவிடும் பணத்தை இம்மாதம் வழங்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு, நிதி அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் ஜி புஞ்சிஹேவா, நிதி அமைச்சின் செயலாளரிடம் எழுத்து மூலம் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளதாக கூறப்படுகின்றது.
எதிர்வரும் மார்ச் மாதம் 09ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்குத் தேவையான அடிப்படைச் செலவுகளுக்காக 770 மில்லியன் தேவைப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை
இந்த நிலையில், குறித்த பணத்தை ஒரே நேரத்திலோ அல்லது தவணையாகவோ வழங்க நடவடிக்கை எடுக்குமாறு நிதி அமைச்சின் செயலாளரிடம் தேர்தல்கள் ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.
இதற்கு முன்னர், தேர்தல் செலவினங்களுக்காக கிட்டத்தட்ட 37 மில்லியன் ரூபாவை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு நிதியமைச்சு வழங்கியுள்ளதக கூறப்படுகின்றது.
மேலும், உள்ளூராட்சி தேர்தல் திகதி வரையிலான காலப்பகுதியில் 04 பில்லியன் ரூபா வரை செலவாகும் என எதிர்பார்க்கப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri

இந்த தேதியில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்.. கணவருக்கு தான் லக்- எண்கணிதம் சொல்வது என்ன? Manithan

போர் நிறுத்தம் அறிவித்ததால் வெளியுறவு செயலாளர் குடும்பத்தை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள் News Lankasri
