கட்சிகளின் செயலாளர்களை அழைக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு!
அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கு விசேட கலந்துரையாடல் ஒன்றுக்காக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த கலந்துரையாடலுக்கான அறிவிப்பினை இன்றைய தினம் (16.03.2023) தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ள அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கு மாத்திரம் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழு
அதற்கான தீர்மானம் இன்றைய தேர்தல்கள் ஆணைக்குழுவின் கலந்துரையாடலின் போது எடுக்கப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் எதிர்வரும் 23ஆம் திகதி குறித்த அரசியல் கட்சிகளின் செயலாளர்களைத் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு வருகை தருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே சொத்து மற்றும் வங்கி சேமிப்பு விபரங்களைச் சமர்ப்பிக்காத அரசியல் கட்சிகளின் பதிவை இரத்துச் செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் இன்றைய கலந்துரையாடலின் போது அடுத்த வருடத்திற்கான பதிவைப் புதுப்பிக்கும் விண்ணப்பத்துடன் சொத்துமதிப்பு குறித்த தகவல்களை இணைக்காத அரசியல் கட்சிகளின் பதிவை இரத்துச் செய்யத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

சரிகமப Li’l Champs சீசன் 4ல் வெற்றிப்பெற்றவர்களுக்கு கிடைத்த பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா? Cineulagam
