தேர்தல் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவுறுத்தல்
தேர்தலுக்கு ஆயத்தமாகுமாறு அரசாங்க நிறுவனங்களுக்கு தேர்தல் ஆணைக்குழு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
அரச அச்சகம், பொலிஸ் திணைக்களம், தபால் திணைக்களம் உள்ளிட்ட அரசாங்க நிறுவனங்களுக்கு இவ்வாறு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
எழுத்து மூலம் இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
வாக்காளர் பட்டியலை உறுதி செய்யும் பணிகள்
இலங்கை போக்குவரத்துச் சபை, இலங்கை மின்சாரசபை, நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை உள்ளிட்ட தேர்தலின் போது தொடர்புடைய சகல நிறுவனங்களுக்கும் இவ்வாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜுலை மாதம் 15ம் திகதியின் பின்னர் நடைபெறவுள்ள எந்தவொரு தேர்தலுக்கும் 2024ம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பினை பயன்படுத்துமாறு கோரப்பட்டுள்ளது.
ஜூன் மாதம் 15ம் திகதிக்குள் வாக்காளர் பட்டியலை உறுதி செய்யும் பணிகள் பூர்த்தியாகும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அரசியல் சாசனத்தின் பிரகாரம் செப்டம்பர் மாதம் 17ம் திகதிக்கும் ஒக்ரோபர் மாதம் 16ம் திகதிக்கும் இடையில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |