உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்குச்சீட்டு விநியோகம் இன்று ஆரம்பம்
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்குச்சீட்டு விநியோகம் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஏப்ரல் 27ஆம் திகதி வாக்குச் சீட்டு விநியோகத்திற்கான விசேட நாளாக நியமிக்கப்பட்டுள்ளதுடன், ஏப்ரல் 29 ஆம் திகதிக்குள் வாக்குச்சீட்டு விநியோகங்கள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தபால் மா அதிபர் ருவான் சத்குமார தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், தபால் வாக்களிப்புக்கான வாக்குச் சீட்டு விநியோகம் ஏப்ரல் 21ஆம் திகதிக்குள் நிறைவடையும் என்று தேர்தல் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் கலந்துரையாடல்
இதேவேளை உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவில் கலந்துரையாடல் ஒன்று நடைபெறவுள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவில் எதிர்வரும் திங்கட்கிழமை இந்த சந்திப்பு நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, உள்ளூராட்சி மன்றங்களுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பில் ஜனாதிபதி முன்வைத்த கருத்துக்கு எதிராக சில அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் நேற்றைய தினம் தேர்தல்கள் ஆணைக்குழுவில் முறைப்பாடளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சோழன் - நிலா சேர்ந்து வாழவில்லை.. சேரன் எடுத்து அதிர்ச்சி முடிவு.. அய்யனார் துணை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam
அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அண்ணாமலை.. குடும்பத்தை விட்டு வெளியேறும் மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam
ஐக்கிய அரபு அமீரகம் மீது பாய்ந்த ஈரானின் 137 ஏவுகணைகள், 209 ட்ரோன்கள்: மத்திய கிழக்கில் பதற்றம் News Lankasri
ஒரேயடியில் 48 ஈரானியத் தலைவர்கள், 9 கடற்படைக் கப்பல்கள் துவம்சம்: பெருமை பேசும் ட்ரம்ப் News Lankasri