தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெற்றுள்ள 519 முறைப்பாடுகள்
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு நேற்று மாலை வரை மொத்தம் 519 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
ஜூலை 31 ஆம் திகதி முதல் ஓகஸ்ட் 16 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் இந்த முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
சட்ட மீறல்கள்
இதன்படி, நேற்றைய தினம் பதிவாகிய 62 முறைப்பாடுகள் தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பானவையாகும்.
இதுவரை கிடைத்துள்ள 519 முறைப்பாடுகளில், தேசிய தேர்தல் முறைப்பாட்டு மேலாண்மை மையத்துக்கு 306 முறைப்பாடுகளும், தேர்தல் முறைப்பாட்டு மேலாண்மைக்கான மாவட்ட மையங்களுக்கு 213 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளன.
மேலும், அனைத்து முறைப்பாடுகளும் சட்ட மீறல்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளதுடன் ஒரு வன்முறை சம்பவமும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |