ஜனாதிபதி வேட்பாளர்களிடம் தேர்தல் ஆணைக்குழு விடுத்துள்ள விசேட கோரிக்கை
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளர்களிடம் தேர்தல் ஆணைக்குழு விசேட கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளது.
ஜனாதிபதி தேர்தலுக்கான கட்டுப்பணத்தை கூடிய சீக்கிரம் செலுத்துமாறு தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.எல்.ஏ ரத்நாயக்க கோரியுள்ளார்.
முன்கூட்டியே கட்டுப்பணம் செலுத்துவதன் மூலம் இறுதி நேரத்தில் எற்படக்கூடிய பிரச்சினைகளை தவிர்த்துக்கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலுக்கான கட்டுப்பணம்
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 14ம் திகதி வரையில் ஜனாதிபதி தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்துவதற்கான கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது.
தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட ஆறு பேர் சார்பில் ஜனாதிபதி தேர்தலுக்காக கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.
ரீமேக் செய்யப்படும் விஜய் டிவியின் சூப்பர்ஹிட் சீரியல்.. அதில் யார் ஹீரோவாக நடிக்கிறார் தெரியுமா? Cineulagam
டெல்லி குண்டுவெடிப்பு ஆபரேஷன் சிந்தூருக்கு பதிலடியா? 2 வாரம் முன்பே எச்சரித்த LeT தளபதி News Lankasri
பிரித்தானியாவின் மில்லியனர் எண்ணிக்கையில் கடும் வீழ்ச்சி - வெளிநாடுகளில் குடியேறும் செல்வந்தர்கள் News Lankasri