தமிழ் தேசியத்திற்கு துரோகம் இழைக்கும் வடக்கு - கிழக்கு அரசியல் தலைமைகள்: கருணாகரம் எம்.பி குற்றச்சாட்டு
புதிய இணைப்பு
வடக்கு - கிழக்கில் சில தமிழ் அரசியல் தலைவர்கள் சிங்கள பேரினவாத அரசுக்கும் சிங்கள பேரினவாத ஜனாதிபதி வேட்பாளர்களுக்கும் வாக்குச் சேர்ப்பதாக தெரிவித்துக் கொண்டு தமிழ் தேசியத்திற்கும் தமிழ் மக்களுக்கும் துரோகம் இழைத்துக் கொண்டிருக்கின்றார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார்.
தமிழ் பொதுவேட்பாளருக்கு ஆதரவளிக்கும் வகையிலான பிரசார நடவடிக்கைகள் இன்று(16.09.2024)மட்டக்களப்பு நகரில் முன்னெடுக்கப்பட்டது.
கோவிந்தன் கருணாகரம் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட இந்த பிரசார நடவடிக்கைகளில் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான பிரசன்னா இந்திரகுமார்,இரா.துரைரெட்னம் உட்பட கட்சி ஆதரவாளர்கள்,தமிழ் தேசிய கட்டமைப்பின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
ஒன்பதாவது ஜனாதிபதி தேர்தல் இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,
“இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் சனிக்கிழமை 21 ஆம் திகதி இந்த நாட்டில் நடைபெற இருக்கின்றது.
உரிமை கோரிக்கை
கடந்த காலங்களில் 8 ஜனாதிபதி தேர்தல்கள் இடம்பெற்று மக்களினால் தெரிவு செய்யப்பட்ட 6 ஜனாதிபதிகளும் இலங்கையின் பூர்விக குடிகளான தமிழ் மக்களை இரண்டாம் தர பிரஜைகளாகவே இன்று வரை நினைத்துக் கொண்டு தங்களது ஆளுமைக்கு கீழ் தங்களது அடிமைகளாக வழிநடத்திக் கொண்டு வருகின்றார்கள்.
அந்த வகையில் நீண்ட காலமாக அகிம்சை ஆயுத ரீதியிலே எமது உரிமைகளை பெறுவதற்காக நாங்கள் போராடியாக ஆயிரக்கணக்கான இலட்சக்கணக்கான உயிர்களை இழந்து இருக்கின்றோம்.
பெருமளவான சொத்துக்கள் எங்களுடைய கலை கலாச்சாரங்களை எல்லாம் இழந்து இன்று நாங்கள் நிற்கதியான நிலையில் நடு சந்தியில் நிற்கும் ஒரு நிலை தமிழ் மக்களுக்கு ஏற்பட்டிருக்கின்றது” என்றார்.
செய்தி - குமார்
முதலாம் இணைப்பு
மட்டக்களப்பு கல்லடியில் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தமிழ் பொது வேட்பாளர்
பா.அரியேந்திரனின் கூட்டத்திற்கு ஆதரவு தேடி நாடாளுமன்ற உறுப்பினர்
கோ.கருணாகரன் தலைமையில் கிழக்கு மாகாண முன்னாள் உறுப்பினர் இரா. துரைரெட்ணம்
உட்பட குழுவினர் பிரசார நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த பிரசார நடவடிக்கையானது இன்று (16) மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து விநியோகிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நாளை (17) பிற்பகல் 3 மணிக்கு கல்லடியில் உள்ள மீன் பூங்காவிற்கு அருகிலுள்ள மைதானத்தில் ஜனாதிபதி தமிழ் பொது வேட்பாளர் பா.அரியேந்திரனின் மாபெரும் பிரசார கூட்டம் இடம்பெறவுள்ளது.
துண்டுப்பிரசுரங்கள் விநியோகம்
இந்த கூட்டத்திற்கு மக்களை வருமாறு அழைப்பு விடுத்து இந்த பிரசார நடவடிக்கையை இன்று ரேலோ கட்சியின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கோ.கருணாகரன். ஈ.பிஆர்.எல்.எப் கட்சி முக்கியஸ்தரும் கிழக்கு மாகாண முன்னாள் உறுப்பினருமான இரா, துரைரெட்ணம், கிழக்கு மாகாண முன்னாள் பிரதி தவிசாளர் இந்திரகுமார் பிரசன்னா மற்றும் கட்சி ஆதரவாளர்கள் கொண்ட குழுவினர் பொது வேட்பாளரின் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்து பிரசார நடவடிக்கையினை ஆரம்பித்து வைத்தனர்.
இதனை தொடர்ந்து மக்களிடம் சங்கு சின்னத்துக்கு வாக்களிக்குமாறு கோரியும் நாளை இடம்பெறவுள்ள கூட்டத்திற்கு அழைப்பு விடுத்து துண்டுப்பிரசுரங்களை மக்களுக்கு விநியோகித்தனர்.
பிரதேச சபை முன்னாள் உறுப்பினர்
மேலும், தமிழ் மக்கள் சங்குச் சின்னத்துக்கே வாக்களிக்க வேண்டும் என துணுகாய் பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் சுயன்சன் தெரிவித்துள்ளார்.
இகு தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |