வவுனியாவில் வயோதிப பெண்ணை காணியிலிருந்து வெளியேறுமாறு கொலை அச்சுறுத்தல்
வவுனியா - சோபாலபுளியங்குளம், ஏழாம் கட்டை கிராமத்தில் வசித்து வரும் க.லட்சுமி என்ற வயோதிப பெண்ணை அவரது காணியிலிருந்து வெளியேறுமாறு 15 பேரடங்கிய கும்பல் ஒன்று கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளதாகப் பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார்.
சோபாலபுளியங்குளம் கிராமத்தில் வசித்துவரும் வயோதிப தாயாரின் காணியின் எல்லைக் கற்களைத் தோண்டியெடுத்து வீசியெறிந்து உடனடியாக காணியிலிருந்து வெளியேறுமாறு கொலையச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.
கடந்த காலத்தில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் அச்சுறுத்தல் தொடர்பாக பொலிஸார், அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு அறிவிக்கப்பட்ட போதும் எந்தவிதமான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என பாதிக்கப்பட்ட பெண் கவலை வெளியிட்டுள்ளார்.
சோபாலபுளியங்குளம் கிராமத்தில் 95 தமிழ் குடும்பங்கள் வசித்துவரும் நிலையில், குறித்த ஒரு கும்பலால் தொடர்ச்சியாக சோபாலபுளியங்குளம் மக்களுக்கு அச்சுறுத்தல் விடுத்து வருவதுடன், விவசாய நடவடிக்கைகளுக்குத் தடை போடும் செயற்பாட்டையும் குறித்த கும்பல் மேற்கொண்டு வருவதாகக் கிராம மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 2 நாட்கள் முன்

அடம்பிடித்த அன்புக்கரிசி.. தயங்கி நிற்கும் அக்கா பாசம்- பேசாமல் ஒதுங்கிய குணசேகரன் குடும்பம் Manithan
