வயோதிபப் பெண்ணிடம் கொள்ளை! யாழில் சம்பவம்
யாழ்.வட்டுக்கோட்டையில் வயோதிபப் பெண்ணிடம் நூதன முறையில் பணம் கொள்ளையிட்ட சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடி பகுதியில் தனியாக வசித்து வந்த மூதாட்டி ஒருவரது ஐம்பதாயிரம் ரூபா பணம் நூதன முறையில் கொள்ளையடிக்கப்பட்டது.
சந்தேகநபர் கைது
இவ்வாறு கொள்ளையடித்த, ஆனைக்கோட்டை - உயரப்புலம் பகுதியைச் சேர்ந்த சந்தேகநபர் இன்றையதினம்(8) கைது செய்யப்பட்டுள்ளார்.
வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியின் கீழ் இயங்கும் பொலிஸ் குழுவினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளின் பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

தமிழ்நாட்டில் 9 நாட்களில் குட் பேட் அக்லி எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
