சவப்பெட்டியிலிருந்து உயிருடன் மீட்கப்பட்ட வயோதிப பெண் (Video)
வயோதிப பெண்ணொருவரின் மரணச்சடங்கில் கலந்துகொண்டவர்கள் சவப்பெட்டியில் அவர் உயிருடன் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த விபரீத சம்பவம் ஈக்குவடோரில் இடம்பெற்றுள்ளது.
76 வயதுடைய பெல்லா மொன்டோயா என்ற பெண் கடந்த வாரம் பாரிச வாதத்தால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கடமையில் இருந்த மருத்துவர் ஒருவரால் அவர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அவரது உடலை நல்லடக்கம் செய்வதற்காக உறவினர்கள் அவர் அணிந்திருந்த உடையை மாற்றுவதற்கு தயாரான போது அவர் மூச்சு விடத் திணறுவது அவதானிக்கப்பட்டது.
தீவிர சிகிச்சை வழங்கப்படல்
இந்த சம்பவம் அவரது உடல் பல மணிநேரமாக சவப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே இடம்பெற்றுள்ளது.
இதனையடுத்து அவர் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் அந்தப் பெண்ணின் மகன் தெரிவிக்கையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது தாயாருக்கு செயற்கை சுவாசம் வழங்கப்பட்டு வருகின்ற நிலையில் அவரது உடல் நலம் தற்போது தேறி வருவதாகக் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |