யாழில் வீதி விபத்து: வயோதிப பெண் பலி
யாழ்ப்பாணம் நீர்வேலிப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் வயோதிப பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து நேற்றையதினம் (24.10.2023) இடம்பெற்றுள்ளது.
நீர்வேலி இராசவீதி பகுதியில் உள்ள ஆலய நிகழ்வு ஒன்றில் குறித்த மூதாட்டி ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது எதிரே நிறுத்தி வைக்கப்பட்ட வாகனத்தின் மீது டிப்பர் வாகனம் ஒன்று மோதியுள்ளது.
சம்பவ இடத்திலே பலி
இந்நிலையில் அந்த வாகனம் மூதாட்டியை மோதி தள்ளியதில் மூதாட்டி சம்பவ இடத்திலே அவர் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் உயிரிழந்தவர் நீர்வேலி மேற்கை சேர்ந்த 72 வயது வயதுடைய ஐந்து பிள்ளைகளின் தாயான தனபாலசிங்கம் மகேஸ்வரி என கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த விபத்து தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளனர்.

பிரபல இயக்குனர் வேலு பிரபாகரன் கவலைக்கிடம்! இறந்துவிட்டதாக பரவிய செய்தி பற்றி குடும்பத்தினர் விளக்கம் Cineulagam

உயிருக்கு பதில் உயிர்தான் வேண்டும்: கேரள செவிலியர் வழக்கில் ஏமன் குடும்பம் வலியுறுத்தல் News Lankasri
