காலி - ஹிக்கடுவ வீதியில் பேருந்தில் மோதி வயோதிபப் பெண் பலி
வீதியில் நடந்து சென்ற வயோதிபப் பெண்ணொருவர், பேருந்து மோதி உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காலி, ரத்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரத்கம சந்திக்கு அருகில், காலியில் இருந்து ஹிக்கடுவை நோக்கிச் சென்ற பேருந்து மோதியதில் இந்தப் உயிரிழந்துள்ளார்.
காலியில் இருந்து ஹிக்கடுவை நோக்கிச் சென்ற பேருந்து, நடைபாதையில் சென்று கொண்டிருந்த பெண் பாதசாரி மீது நேற்று மோதி விபத்துக்குள்ளானதில் அந்தப் பெண் காயமடைந்தார்.
பொலிஸார் விசாரணை
அவர் காலி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

விபத்தில் உயிரிழந்த பெண், பூஸா பகுதியைச் சேர்ந்த 77 வயதுடையவர் என பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
சடலம் காலி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. விபத்துடன் தொடர்புடைய பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் ரத்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |