நானுஓயாவில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி வயோதிபப் பெண் உயிரிழப்பு
நுவரெலியா - நானுஓயா பகுதியில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி வயோதிபப் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று (12.012026) நடந்த இந்த விபத்தில், நானுஓயா, கிரிமிட்டி தோட்டத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயான சடையன் லெட்சுமி எனும் 78 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பொலிஸார் விசாரணை
தொழிலாளர்கள் குழுவினர் இணைந்து தேயிலை மலையில் கொழுந்து பறித்துக் கொண்டிருக்கையில் மரம் ஒன்றில் இருந்த குளவி கூட்டை கழுகு கொத்தி கலைத்ததால் குளவி கூடு கலைந்து கொழுந்து பறித்துக்கொண்டிருந்தவர் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதன்போது குறித்த பெண் தொழிலாளி, குளவிக் கொட்டுக்கு இலக்காகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த பெண் தொழிலாளியின் சடலம் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் நானுஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வெனிசுலாவின் தற்காலிக ஜனாதிபதி நானே...! சர்ச்சைகளுக்கு மத்தியில் ட்ரம்ப் வெளியிட்ட பரபரப்பு அறிவிப்பு
விண்வெளியில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்கும் தமிழர் - விண்ணுக்கு புறப்பட்ட PSLV C62 News Lankasri