யாழில் வயோதிப பெண்ணிற்கு நேர்ந்த அவலம்!
யாழில் மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்திருந்து பயணித்த வயோதிப பெண்ணொருவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.
கோப்பாய் பகுதியைச் சேர்ந்த சாம்பசிவம் தங்கம்மா (வயது 79) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த மூதாட்டி கடந்த 17ஆம் திகதி தபால் நிலையத்தில் முதியோருக்கான கொடுப்பனவை எடுத்துவிட்டு வீடு நோக்கி வந்து கொண்டிருந்தார்.
உயிரிழப்பு
இதன்போது, வீதியில் மோட்டார் சைக்கிளில் வந்த பெண்ணொருவர் அவரை ஏற்றிக்கொண்டு சென்றுள்ளார்.
இந்தநிலையில், திடீரென அந்த மூதாட்டி கீழே விழுந்து மயக்கமடைந்துள்ள நிலையில் அவரை கோப்பாய் வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு (3) உயிரிழந்துள்ளார்.
மேலும், அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

SBI JanNivesh SIP முதலீட்டு திட்டம்.., குறைந்தபட்சமாக ரூ.250 முதலீடு செய்து ரூ.7 லட்சம் பெறலாம் News Lankasri
