தமிழர் பகுதியில் வயோதிபப் பெண்ணின் சடலம் மீட்பு! பொலிஸார் தீவிர விசாரணை
மூங்கிலாறு பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் மூதாட்டி ஒருவருடைய சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவமானது இன்று (28) காலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட உடையார்கட்டு வடக்கு மூங்கிலாறு 200 வீட்டுதிட்டம் பகுதியில் வசிக்கும் 84 வயதுடைய கோபாலன் குண்டுமணி எனும் மூதாட்டியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சடலம் மீட்பு
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த பகுதியில் கொலை செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மூதாட்டியின் சடலம் புதுக்குடியிருப்பு பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த மரணம் தொடர்பாக புதுக்குடியிருப்பு பொலிசார் மேலதிக விசாரணை மேற்கொண்டுவருவதுடன் குறித்த சடலத்தை முல்லைத்தீவு நீதவான் நேரடியாக பார்வையிட்ட பின்னர் உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் பொலிசாரால் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
விசாரணை
ஏற்கனவே 2021ஆம் ஆண்டு நிதர்சனா என்ற இளம்பெண் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த குறித்த பகுதியிலே இவ் மூதாட்டியின் மரணம் இடம்பெற்றுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த மரணம் எவ்வாறு இடம்பெற்றது, கொலையா, மரணத்திற்கான காரணம் என்ன, பல்வேறு கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





இந்தியா மீது அணுகுண்டு வீச்சு... ட்ரம்பை கொல்ல வேண்டும்: அமெரிக்காவை உலுக்கிய சம்பவத்தில் பகீர் பின்னணி News Lankasri
