கிளிநொச்சியில் இராணுவத்தினரின் உதவியுடன் ஓய்வூதிய கொடுப்பனவை பெற்ற முதியவர்கள்
கிளிநொச்சி மாவட்டத்தில் ஓய்வூதியக் கொடுப்பனவு பெறுவதற்காக இராணுவத்தினரால் முதியவர்கள் வங்கிகளுக்கு அழைத்து வரப்பட்டனர்.
நாட்டின் பல பாகங்களில் அரசு மற்றும் தனியார் வங்கிகள் ஜூன் 10 மற்றும் 11 திகதிகளில் ஓய்வூதிய கொடுப்பனவுகள் வழங்கப்படுகின்றன.
இந்நிலையில் தற்போதுள்ள பயணத்தடையின் காரணமாக ஓய்வூதியக் கொடுப்பனவைப் பெறுவோர் தமது கொடுப்பனவினை பெறுவதில் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
இந்நிலையில், இராணுவத்தினரால் வாகன ஒழுங்குகள் ஏற்பாடு செய்யப்பட்டு,ஓய்வூதியக் கொடுப்பனவைப் பெறுவோர் அழைத்து வரப்பட்டு பெற்ற பின்னர் மீண்டும் அவர்களது வீடுகளுக்கே அழைத்துச் சென்றுள்ளனர்.
இந்த உதவியினை செய்த இராணுவத்தினருக்கும் மற்றும் ஜனாதிபதிக்கும் ஓய்வூதியக் கொடுப்பனவைப் பெறுவோர் தமது நன்றியினை தெரிவித்துள்ளனர்.
யாருக்கும் தெரியாமல் மயிலை பார்க்க சென்ற மீனா, அவரது அம்மா சொன்ன விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
Viral Video: மீனுடன் வானில் பறந்த கழுகு... தட்டிப்பறிக்க வந்த பெலிகான் பறவை! கடைசியில் நடந்தது என்ன? Manithan
ஆசிய நாடொன்றில்... கோடீஸ்வரர்கள் குவித்து வைத்திருக்கும் ரூ 12,500 கோடி மதிப்பிலான தங்கம் News Lankasri