யாழில் விபத்தில் படுகாயமடைந்த வயோதிபர் உயிரிழப்பு
வீதியைக் கடக்க முற்பட்ட வயோதிபரை மோட்டார் சைக்கிள் மோதியதில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
மட்டுவில் வடக்கு, சந்திரபுரத்தைச் சேர்ந்த க.லோகநாதன் (வயது – 65) என்பவரே உயிரிழந்துள்ளார்.
சாவகச்சேரி பொலிஸ் நிலையத்துக்கு அருகிலுள்ள வீதியில், வர்த்தக நிலையத்துக்குச் சென்றுவிட்டு வீதியைக் கடக்க முற்பட்டபோது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் வயோதிபரை மோதியுள்ளது எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் படுகாயமடைந்த வயோதிபர் மற்றும் மோட்டார் சைக்கிள் சாரதியான இளைஞர் இருவரும் சாவகச்சேரி ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட வயோதிபர்
நேற்று அங்கு உயிரிழந்துள்ளார்.



