வடை வண்டியுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் வயோதிபர் படுகாயம்
திருகோணமலை - புல்மோட்டை பிரதான வீதி நிலாவெளி 09ம் கட்டை பகுதியில் வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வடை வண்டியுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த வயோதிபர் படுகாயம் அடைந்துள்ளதாகத் தெரியவருகின்றது.
குறித்த சம்பவம் இன்று (25) காலை இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்தில் திருகோணமலை-திருக்கடலூர் பகுதியைச் சேர்ந்த எம்.புனிதராஜா (58 வயது) என்பவர் படுகாயம் அடைந்த நிலையில் நிலாவெளி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
பின்பு மேலதிக சிகிச்சைக்காகத் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
விபத்து தொடர்பில் நிலாவெளி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Bigg Boss: இரண்டாவது எவிக்ஷனில் இன்று வெளியேறுவது யார்? எவிக்ஷன் கார்டை காட்டிய விஜய் சேதுபதி Manithan
இந்தியாவில் 1 ரூபாய் நோட்டு ரிசர்வ் வங்கியால் வெளியிடப்படவில்லை... பலரும் அறிந்திராத தகவல் News Lankasri