முல்லைத்தீவில் வயல் உழுவதற்குச் சென்ற முதியவர் சடலமாக மீட்பு
முல்லைத்தீவு - மல்லாவி 3ஆம் யூனிட் பகுதியிலுள்ள வயல் காணியை உழுவதற்குச் சென்ற முதியவர் ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மல்லாவி, யோகபுரம் பாரதி நகர் பகுதியைச் சேர்ந்த 71 வயதான சின்னையா திருச்செந்தூர் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நேற்று (12) மாலை வயல் காணியை உழுவதற்காகச் சென்ற குறித்த முதியவர், இரவாகியும் வீடு திரும்பாததையடுத்து உறவினர்கள் மற்றும் பிரதேசவாசிகள் அவரைத் தேடிச் சென்றுள்ளனர்.
பொலிஸார் விசாரணை
இதன்போதே வயல் பகுதியில் அவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.

இதனையடுத்து, பிரதேசவாசிகளின் உதவியுடன் அவரது சடலம் மீட்கப்பட்டு மல்லாவி வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
அத்துடன், இன்று (13) பிரேதப் பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மல்லாவி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.