யாழில் விபத்தில் பறிபோன முதியவரின் உயிர்
காரைநகரில் நேற்றிரவு(03.08.2026) இடம்பெற்ற விபத்து ஒன்றில் முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இதன்போது காரைநகர் - கருங்காலி பகுதியை சேர்ந்த குமாரன் மகேந்திரலிங்கம் (வயது 66) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உதயநிதி ஸ்டாலின் கைதினால் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பு - களமிறங்கிய அதிரடிப்படையினர் - முதல்வர் பிறப்பித்த உத்தரவு
வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதி
இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த முதியவர் நேற்றிரவு கருங்காலி பகுதியில் துவிச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்தபோது அவ் வீதியால் வந்த மோட்டார் சைக்கிளானது வேகக் கட்டுப்பாட்டை மீறி முதியவர் மீது மோதியுள்ளது.

இருப்பினும் முதியவரை உடனடியாக யாரும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லாத நிலையில் அவர் அங்கேயே உயிரிழந்தார்.
பின்னர் அவரது சடலமானது காரைநகர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதேவேளை மோட்டார் சைக்கிளில் பயணித்தவரும் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து விசாரணைகளை ஊர்காவற்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
உதயநிதி ஸ்டாலின் கைதினால் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பு - களமிறங்கிய அதிரடிப்படையினர் - முதல்வர் பிறப்பித்த உத்தரவு