யாழில் உழவு இயந்திரத்துடன் மோதி முதியவர் பலி
யாழ்ப்பாணம் (Jaffna) பலாலி வீதி வடக்கு புன்னாலை கட்டுவன் சித்திவிநாயகர் பாடசாலைக்கு அருகாமையில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்து இன்று (12) அதிகாலை ஒரு மணியளவில் இடம்பெற்றுள்ளது.
பலாலியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி இடது பக்கமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உழவு இயந்திரத்துடன், பின்பக்கமாக மோட்டார் வாகனத்தில் பயணித்த முதியவர் ஒருவரே இவ்வாறு மோதி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் கந்தவர்ணம் செல்வநாயகம் என்ற 62 வயதான பலாலி கிழக்கு வசாவிளான் பகுதியினை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளுக்காக..
இந்நிலையில், சந்தேகத்தின் அடிப்படையில் உழவு இயந்திரத்தின் சாரதியான 27 வயது இளைஞர் ஒருவரை சுன்னாகம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இதேவைளை முதியவரின் உடலம் மேலதிக விசாரணைகளுக்காக தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |