யாழில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் பலி
யாழில் நேற்றுமுன்தினம்(04.07.2026) இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கோவில் வீதி, நல்லூர் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் ஏகானந்தசிவம் (வயது 72) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் மீண்டும் பெரும் பதற்றம்! ஐவர் பலி - பலர் காயம்: அதிரடிப்படையினர் துப்பாக்கிச்சூடு
மோட்டார் சைக்கிள் மோதி விபத்து
இது குறித்து மேலும் தெரியவருகையில், இவர் நேற்றுமுன்தினம் கல்வியங்காட்டில் சாப்பாடு வாங்கிக்கொண்டு பருத்தித்துறை வீதியால் துவிச்சக்கர வண்டியில் சென்றுள்ளார்.

இதன்போது வலதுபக்க வீதியால் செல்வதற்காக மத்தியகோடு நோக்கி பயணித்துள்ளார்.
இதன்போது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதி விபத்து சம்பவித்துள்ளது. இதன்போது அவர் மயக்கமுற்றுள்ளார்.
அதன்போது அவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் அங்கு உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.