யாழ். மண்கும்பான் பகுதியில் முதியவர் உயிரிழப்பு
யாழ்ப்பாணம் - மண்கும்பான் பகுதியில் மாடு முட்டியதனால் படுகாயமடைந்த முதியவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவத்தில் 4ஆம் வட்டாரம், மண்கும்பான் என்னும் முகவரியைச் சேர்ந்த நல்லையா கணேஸ்வரன் (வயது 62) என்ற 8 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்தவராவார்.
மண்கும்பான் பிள்ளையார் ஆலயத்தின் மெய்ப்பாதுகாவலராக பணியாற்றும் இந்த முதியவர் கடந்த 29ஆம் திகதி ஆலயத்திற்குச் சொந்தமான மாடு ஒன்றைக் கட்ட முற்பட்டபோது மாடு முட்டி வயிற்றில் பெரும் காயம் ஏற்பட்டுள்ளது.
இதனால் உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனளிக்காது 5ம் நாள் நேற்று உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் மரண விசாரணையை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம்
பிறேம்குமார் மேற்கொண்டுள்ளார்.
பிரான்சில் சீற்றத்தை ஏற்படுத்திய பிரித்தானிய மாணவி: இங்கிலாந்து இளைஞர்களுக்கு கிளர்ச்சி அழைப்பு News Lankasri
ஜேர்மனியில் வன்முறையாக வெடித்த இளைஞர்கள் போராட்டம்... கடைகளைச் சூறையாடிய கலவரக்காரர்கள் News Lankasri
பாக்ஸ் ஆபிஸ்- ஆந்திராவில் முதல் தமிழ் திரைப்படம் செய்துள்ள சாதனை... ரஜினியின் ஜெயிலர் 2 செய்த ஆல்டைம் ரெக்கார்ட் Cineulagam
ரூ. 634 கோடிக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை... ஊழல் குறித்து சீரியல் நடிகை ஜனனி அசோக் Cineulagam