கூலர் வாகனம் மோதியதில் வயோதிபர் உயிரிழப்பு
யாழ். வடமராட்சி - பருத்தித்துறையில் கூலர் ரக வாகனம் மோதி விபத்தில் சிக்கி படுகாயமுற்றிருந்த வயோதிபர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் ஞானியார் வளவு, வியாபாரிமூலை, பருத்தித்துறையை சேர்ந்த பரஞ்சோதி சற்குணநாதன் (வயது - 80) என்பவராவார்.
கடந்த 18ஆம் திகதி கூலர் ரக வாகனம் மோதியதில் படுகாயமடைந்த இவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
அங்கிருந்து கடந்த திங்கட்கிழமை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் நேற்றுப் பிற்பகல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
வைத்தியசாலைக்குச் சென்ற பருத்தித்துறை மரண விசாரணை அதிகாரி சதானந்தன் சிவராசா விசாரணைகளை மேற்கொண்டார். பிரேத பரிசோதனையின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இவ்விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட வாகன சாரதி காயம் காரணமாக பிணையில்
விடுதலை செய்யப்பட்டார்.
குறித்த வயோதிபர் உயிரிழந்ததை அடுத்து அவர் மீண்டும் கைது செய்யப்படவுள்ளார்
என தெரிவிக்கப்பட்டது.

சொகுசு கார் முதல் பல ஆயிரம் டொலர் சம்பளம் வரை! போப் பிரான்சிஸ் செய்த நெகிழ்ச்சி செயல்கள் News Lankasri

இந்த வாரம் ஓடிடி-யில் ரிலீஸாகும் எதிர்பார்ப்புக்குரிய இரண்டு படங்கள்.. Week end என்ஜாய் பண்ணுங்க Cineulagam

அரக்கனை கொன்று விட்டேன் - முன்னாள் டிஜிபியை கொலை செய்து விட்டு மனைவி பகீர் வாக்குமூலம் News Lankasri
