யாழில் கல்லுண்டாய் பகுதியில் மயங்கி விழுந்த முதியவர்

Jaffna Sri Lanka Northern Province of Sri Lanka
By Kajinthan Oct 04, 2024 01:15 PM GMT
Report

யாழ்ப்பாணம் கல்லுண்டாய் பகுதியில் உள்ள கழிவுப் பொருட்கள் சேகரிக்கும் பகுதிக்கு தீ வைத்ததனால் குறித்த வீதியில் பயணித்த முதியவர் ஒருவர் மயக்கமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

கல்லூண்டாயில் உள்ள, யாழ். மாநகர சபையினரின் கழிவுப் பொருட்கள் சேகரிக்கும் பகுதிக்கு இன்று (04.10.2024) காலை தீ வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புகை வீதியெங்கும் பரவியது.

யாழ். பண்ணை சுற்றுவட்டப் பகுதிகளில் சிரமதான நடவடிக்கைகள்

யாழ். பண்ணை சுற்றுவட்டப் பகுதிகளில் சிரமதான நடவடிக்கைகள்

நோய் அபாயம்

இதன்போது, துவிச்சக்கரவண்டியில் குறித்த வீதியால் பயணித்த 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவருக்கு மயக்கம் ஏற்பட்ட நிலையில், அவர் துவிச்சக்கர வண்டியை நிறுத்திவிட்டு வீதியோரத்தில் அமர்ந்திருந்ததாகவும், வீதியால் சென்றவர்கள் அவருக்கு தண்ணீர் கொடுத்து மயக்க நிலையை போக்கியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

யாழில் கல்லுண்டாய் பகுதியில் மயங்கி விழுந்த முதியவர் | Elder Man Affected By Incineration Of Waste

குறித்த பகுதியில் கழிவுப் பொருட்களுக்கு அடிக்கடி தீ மூட்டும் சம்பவங்கள் இடம்பெறுகின்றன. மருத்துவமனை கழிவுகளும் அதில் உள்ளடங்குவதனால், அந்த புகையை சுவாசிப்பவர்களுக்கு பல்வேறு விதமான நோய்கள் ஏற்படக்கூடிய அபாயகரமான சூழ்நிலைகளும் காணப்படுகின்றன.

குறித்த பகுதியில் கழிவுப் பொருட்களுக்கு தீ மூட்டுவதால், வீதி எங்கும் புகை மூட்டமாகி வீதியில் செல்லும் மக்கள் பல்வேறு விதமான இன்னல்களை எதிர்கொள்வதாக ஏற்கனவே ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருந்தன.

மக்களது கோரிக்கை

இருந்தும் கூட இவ்வாறான சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெறுகின்றமையால் உரிய தரப்பினர் அசமந்தமாக உள்ளனரா என்ற கேள்வி மக்கள் மத்தியில் ஏற்படுகின்றது.

யாழில் கல்லுண்டாய் பகுதியில் மயங்கி விழுந்த முதியவர் | Elder Man Affected By Incineration Of Waste

குறித்த பகுதியானது மானிப்பாய் பிரதேச சபையின் எல்லைக்குள் காணப்படுகின்றது. இருப்பினும் யாழ்ப்பாண மாநகர சபையினரே அந்த பகுதியில் கழிவுகளை கொட்டுகின்றனர்.

எனவே, யாழ்ப்பாண மாநகர சபையின் ஆணையாளரும் மானிப்பாய் பிரதேச சபையின் செயலாளரும் இது குறித்து அதிக கவனம் செலுத்தி விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மக்களது கோரிக்கையாக காணப்படுகின்றது.  

சிறீதரன் தொடர்பாக திடீரென பரவிய அவதூறு தகவல்: விசாரணையில் வெளிவந்த உண்மை

சிறீதரன் தொடர்பாக திடீரென பரவிய அவதூறு தகவல்: விசாரணையில் வெளிவந்த உண்மை

அரசியலில் இருந்து ஒதுங்கப் போவதாக பந்துல குணவர்தன அறிவிப்பு

அரசியலில் இருந்து ஒதுங்கப் போவதாக பந்துல குணவர்தன அறிவிப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US