முரண்பாடு காரணமாக தம்பியை கொடூரமாக கொலை செய்த அண்ணன்
அனுராதபுரத்தில் இளைய சகோதரனை கொடூரமாக கொலை செய்த அண்ணனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கல்னெவ பகுதியிலுள்ள வீடொன்றில் நேற்று இடம்பெற்ற மோதலில் மண்வெட்டியால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவுக்கண பிரதேசத்தை சேர்ந்த லலித் சந்திரகுமார (46) என்ற முன்னாள் கடற்படை வீரரே கொலை செய்யப்பட்டுள்ளார்.
சகோதரர்களுக்கு இடையில் முறுகல்
கடற்படை முகாமில் கடமையாற்றும் காலத்தில் இடம்பெற்ற விபத்தொன்றினால் ஊனமுற்று பணியிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார்.
இந்நிலையில், இரு சகோதரர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில், மூத்த சகோதரன் இளைய சகோதரனின் தலையில் மண்வெட்டியால் தாக்கியுள்ளார்.
இதில் காயமடைந்து தரையில் வீழ்ந்தவரை மூத்த சகோதரன் மீண்டும் பலமாக தாக்கி கொலை செய்துள்ளார்.
சந்தேக நபர் அங்கிருந்து தப்பிச் செல்ல முற்பட்ட வேளையினால் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பதினாறாவது மே பதினெட்டு 3 நாட்கள் முன்

கார் பிரச்சனையில் தப்பித்த முத்து-மீனாவிற்கு வந்த அடுத்த அதிர்ச்சி.. என்ன செய்வார்கள், சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam

Siragadikka Aasai: சீதாவின் காதலரை நேருக்கு நேர் சந்தித்த முத்து... அடுத்து நடக்கப்போவது என்ன? Manithan
