எல்நினோ தாக்கம்! முள்ளிப்பொத்தானையில் கடும் வறட்சி - முற்றாக வற்றிய கிணறுகள்
எல்நினோ காலநிலைத் தாக்கம் காரணமாக ஏற்பட்டுள்ள கடும் வறட்சியால், திருகோணமலை மாவட்டத்தின் முள்ளிப்பொத்தானை பகுதியில் கிணறுகளில் நீர் வற்றி வரண்ட நிலையில் காணப்படுவதா எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
நீண்ட காலமாக போதிய மழைவீழ்ச்சி இல்லாததன் காரணமாக அப்பகுதியில் உள்ள பல கிணறுகளில் நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளது.
இதன் காரணமாக சில கிணறுகள் முற்றாக வற்றிய நிலையில் காணப்படுகின்றன.
குழாய் நீர் விநியோகம்
அதேவேளை, குழாய் நீர் விநியோகமும் தொடர்ச்சியாக இடம்பெறாமல், குறிப்பிட்ட நேரங்களில் மாத்திரமே விநியோகிக்கப்படுகிறது.

இதன் காரணமாக மக்கள் குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக, குடிநீர் தேவைக்காக கிணறுகளை நம்பியுள்ள குடும்பங்கள் வறட்சியால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் நாட்களிலும் மழை பெய்யாத பட்சத்தில் நிலைமை மேலும் மோசமடையக்கூடும் என மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.