இலங்கையில் காலநிலையில் ஏற்படவுள்ள சடுதியான மாற்றம் - எதிர்பார்க்கப்பட்டதை விட முன்கூட்டியே தாக்கம்
எல் நினோ காலநிலை மாற்றமானது முன்னர் எதிர்பார்க்கப்பட்டதை விட முன்கூட்டியே இலங்கையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என சுற்றாடல் துறை அமைச்சர் தம்மிக பட்டபெந்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்று வரும் விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,'எல் நினோ'வின் உச்சகட்ட தாக்கம் நவம்பர் மாதமளவில் எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன், ஆகஸ்ட் மற்றும் செப்டெம்பர் மாதங்களில் இலங்கையில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதனைத் தொடர்ந்து அக்டோபர் முதல் டிசம்பர் வரையான காலப்பகுதியில் பலத்த மழை பெய்யக்கூடும்.
காலநிலை மாற்றங்கள்
இந்தக் காலநிலை மாற்றத்தினால் ஏற்படக்கூடிய சாத்தியமான தாக்கங்களுக்குத் திறம்பட முகங்கொடுக்கும் வகையில், அரச நிறுவனங்கள் மற்றும் ஊடகங்களின் செயற்பாடுகளை ஒருங்கிணைப்பது தொடர்பில் உரிய தரப்பினருடன் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

'எல் நினோ' என்பது ஒரு உலகளாவிய மோசமான காலநிலை தாக்கமாகும். அதன் தாக்கங்கள் இலங்கைக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டதல்ல என குறிப்பிட்டுள்ளார்.