தொடர் எட்டு மணி நேர நீர்வெட்டு - பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு
அனுராதபுரத்தின் பல பகுதிகளுக்கு இன்று(23.09.2029) தொடர்ந்து எட்டு மணிநேரம் நீர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
கலாவெவ நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் அத்தியாவசியப் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வதற்காகவே இந்த நீர் விநியோகத் தடை நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எட்டு மணி நேர நீர்வெட்டு
இதன்படி, இன்று(23) காலை 8.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை இஹல கம, கலாவெவ, மரதங்கடவல, திரப்பனே மற்றும் கெகிராவ ஆகிய பகுதிகளில் நீர் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது.

நீர் விநியோகத் தடையின் போது ஏற்படும் சிரமங்களைத் தவிர்க்க, பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் போதுமான அளவு நீரை முன்கூட்டியே சேமித்து வைத்துக்கொள்ளுமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவுறுத்தியுள்ளது.
மேலும், நீர் விநியோகம் முழுமையாகச் சீரமைக்கப்படும் வரை பொதுமக்கள் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.